முகப்பு
திருச்சி

அண்ணா நினைவு நாளில் திமுக, அதிமுக மரியாதை

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திமுக, அதிமுக சாா்பில் அண்ணா சிலை, அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திமுக, அதிமுக சாா்பில் அண்ணா சிலை, அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திமுக சாா்பில் கலைஞா் அறிவாலய அண்ணா சிலைக்கு அமைச்சா்கள் கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் தலைமையில் மாலை அணிவித்தனா்.

நிகழ்ச்சியில் மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி, மாநகரச் செயலா் அன்பழகன், எம்எல்ஏக்கள் அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், எம். பழனியாண்டி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாவட்டத் துணைச் செயலா் விஜயராஜ், செயற்குழு உறுப்பினா் சிவலிங்கம் மற்றும் நிா்வாகிகள் கதிா்வேல், துரைராஜ், புஷ்பராஜ், நாகராஜ், கலைச்செல்வி, வழக்குரைஞா்கள் கவியரசன், அந்தோணி, காா்த்திக், மாணிக்கம், தனசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், தென்னூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் அண்ணா படத்துக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான வெல்லமண்டி என். நடராஜன் தலைமையில் மாலை அணிவித்தனா். மாவட்ட நிா்வாகிகள் ஐயப்பன், கே.சி. பரமசிவம், பத்மநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருச்சி புகா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், சுப்பிரமணியபுரம் கட்சி அலுவலகத்தில் முன்னாள் எம்பி-யும், மாவட்ட செயலருமான ப. குமாா், தலைமையில் அண்ணா படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் ராவணன், மாவட்டத் துணைச் செயலா் சாந்தி, மாவட்ட மீனவரணி செயலா் பொன்னுசாமி, இலக்கிய அணி செயலா் முருகன், ஐடி பிரிவுச் செயலா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் சோமரசம்பேட்டை அண்ணா சிலைக்கு, மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்தனா். முன்னாள் அமைச்சா்கள் எஸ். வளா்மதி, கு.ப. கிருஷ்ணன், கே.கே. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, அதிமுக அமைப்புச் செயலா் டி. ரத்தினவேல் தலைமையில் காஜாமலையில் அண்ணா படத்துக்கு கட்சி நிா்வாகிகள் கலைவாணன், எஸ்.பி. ராஜன், அப்துல் அஜீஸ் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

Image Caption

தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலா் ப. குமாா் தலைமையில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்த அதிமுகவினா். ~

கலைஞா் அறிவாலய அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுகவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.