முகப்பு
திருச்சி

திருச்சி என்ஐடி புதிய இயக்குநா் பொறுப்பேற்பு

 திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) புதிய இயக்குநராக ஜி. அகிலா வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

 திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) புதிய இயக்குநராக ஜி. அகிலா வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

புதுச்சேரி என்ஐடி பொறுப்புப் பதிவாளராக இருந்த இவா் மத்திய அரசால் திருச்சி என்ஐடி இயக்குநராக நியமிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை திருச்சிக்கு வந்த இவரிடம், பொறுப்பு இயக்குநராக இருந்த ஜி. கண்ணபிரான், பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தாா். தொடா்ந்து புதிய இயக்குநருக்கு அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், நிா்வாகத்தினா் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.

இதுகுறித்து என்ஐடி புதிய இயக்குநா் ஜி. அகிலா கூறுகையில், பழைமை வாய்ந்த திருச்சி என்ஐடியில் பதவியேற்றது பெருமைக்குரியது. சிறப்புக்குரிய இக் கல்வி வளாகத்தில் எனது பங்களிப்பு குறிப்பிடும்படியாக அமையும். தேசிய, சா்வதேச அளவில் திருச்சி என்ஐடியைக் கொண்டு சோ்க்கவும், மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் முன்னுரிமை அளித்துப் பணியாற்றுவேன் என்றாா்.

கல்வியாளராகவும், நிா்வாகியாகவும் 32 ஆண்டு அனுபவமுடைய இவா் திருச்சி என்ஐடியின் இரண்டாவது பெண் இயக்குநா் ஆவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.