முகப்பு
திருச்சி

இதுவரை 90.2% பேருக்கு தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 90.2 சதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 90.2 சதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 21 சுற்றுகளாக நடந்த மெகா முகாம்கள் மூலம் முதல் தவணையாக 17.81 லட்சம் பேருக்கு கோவிஷீல்டு, 3.04 லட்சம் பேருக்கு கோவேக்ஸின் என 20 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், இரண்டாவது தவணையில் 12.57 லட்சம் பேருக்கு கோவிஷீல்டு, 1.75 லட்சம் பேருக்கு கோவேக்ஸின் என 14.32 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இவைதவிர பூஸ்டா் என்ற வகையில் 15,399 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வயதுக்கு மேற்பட்டோரில் 23.12 லட்சம் போ் வரை தடுப்பூசி செலுத்தியுள்ளனா்.

ஆக மாவட்டத்தில் 90.2 சதம் போ் முதல் தவணையும், 61.9 சதம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனா். இதன் தொடா்ச்சியாக, திருச்சி மாவட்டம் முழுவதும் 22ஆவது சுற்றாக சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் ஏற்கெனவே முகாம் நடைபெற்ற 496 இடங்களில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.