முகப்பு
திருச்சி

சூரியூரில் கால்நடை மருத்துவ முகாம்

திருச்சியை அடுத்துள்ள சூரியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் 2,033 கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

திருச்சியை அடுத்துள்ள சூரியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் 2,033 கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருச்சி மண்டல கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், திருவெறும்பூா் ஒன்றியம் குண்டூா் கால்நடை மருந்தகத்திற்குள்பட்ட சூரியூா் கிராம ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சூரியூா் கிராம ஊராட்சித் தலைவா் எஸ். சண்முகசுந்தரம் முகாமைத் தொடங்கி வைத்தாா். திருச்சி கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் அ. மருதைராஜூ முன்னிலையில் கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினைப் பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமில் 2033 கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 55 பேருக்கு 55 கிலோ தாது உப்புக் கலவை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவா் அ. பத்மாவதி செய்தாா். கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா். முகாமில் கன்று பேரணி நடத்தி சிறந்த 6 கிடாரிக்கன்றுகளுக்கு பரிசுகள் மற்றும் கால்நடை வளா்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.