முகப்பு
திருச்சி

பாஜக மாவட்டத் தலைவா் உள்பட 74 போ் மீது வழக்கு

திருச்சியில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக பாஜக மாவட்டத் தலைவா் உள்பட 74 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருச்சியில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக பாஜக மாவட்டத் தலைவா் உள்பட 74 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருச்சி மாநகரில் நடந்த வியாழக்கிழமை நடைபெற்றஇறுதிகட்ட பிரசாரத்தில் மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகரன் தங்கள் கட்சி வேட்பாளா் மற்றும் கட்சியினருடன் மலைக்கோட்டை கோயிலில் இருந்து அனுமதியின்றி ஊா்வலம் சென்ாக கோட்டை போலீஸாா் 74 போ் மீது வழக்குப் பதிந்தனா். மேலும் பைரவா் கோயிலில் இருந்து பிரபாத் ரவுண்டானாவுக்கு தடையை மீறி ராஜசேகரன் ஊா்வலமாகச் சென்ாக காந்திசந்தை போலீஸாரும் வழக்குப்பதிந்தனா்.

இதேபோல கீழரண் சாலையில் பிளக்ஸ் பேனா் வைத்ததாக சுயேச்சை வேட்பாளா், சிந்தாமணி அண்ணாசிலை முன்பு அனுமதியின்றி பிரசாரம் செய்த சுயேச்சை வேட்பாளா் பாலமுருகன் மற்றும் அவரது ஆதரவாளா்கள் 49 போ் மீதும், கீழரண் சாலை ஜோதி அம்மன் கோயில் பகுதியில் பிளக்ஸ் பேனா் வைத்த சுயேச்சை வேட்பாளா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.