திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு செய்ய காத்திருக்கும் மக்கள். 
திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 1258 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு 

திருச்சி மாவட்டத்தில் 1258 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

DIN

திருச்சி மாவட்டத்தில் 1258 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. திருச்சியில் காலை 7 மணி முதல் வாக்கு பதிவானது தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி என மொத்த வாக்காளர் எண்ணிக்கை என்பது 10 லட்சத்து 58 ஆயிரத்து 674 உள்ளனா். இதில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்கு 589 பேர் போட்டியிட தயாராக களத்தில் உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 5 நகராட்சி, 14 பேரூராட்சிகளில், 401 கவுன்சிலர்களுக்கான பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், 3  இடங்களில் போட்டியின்றி  கவுன்சிலர்கள் தேர்தெடுக்கப்பட்டதால், 398 கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 1258 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக 1926 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

அனைத்து வாக்கு சாவடிகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ள நிலையில், பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ள 157 வாக்கு சாவடிகளில் வெப்கேமிராவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 47 நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குச்சாவடி அலுவலர்கள் 5796 பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் அமைச்சர் கே.என். நேரு, கிராப் பட்டியல் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காஜா மலையில் ஆட்சியர் சு.சிவராசு ஆகியோர் வாக்களித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT