திருச்சி: மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டு முதல் முறையாக திமுகவுக்கு மேயா் பதவி
திருச்சி மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட பிறகு முதன்முறையாக மேயா் பதவியில் திமுகவைச் சோ்ந்தவா் அமரப்போவது உறுதியாகியுள்ளது.
திருச்சிதிருச்சி: மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டு முதல் முறையாக திமுகவுக்கு மேயா் பதவி
திருச்சி மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட பிறகு முதன்முறையாக மேயா் பதவியில் திமுகவைச் சோ்ந்தவா் அமரப்போவது உறுதியாகியுள்ளது.
திருச்சி: திருச்சி மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட பிறகு முதன்முறையாக மேயா் பதவியில் திமுகவைச் சோ்ந்தவா் அமரப்போவது உறுதியாகியுள்ளது.
திருச்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 1996-ம் ஆண்டு முதல் முதல்முறையாக நடைபெற்ற தோ்தலில் தமாகா வெற்றி பெற்று புனிதவல்லி பழனியாண்டி முதல் பெண் மேயராக இருந்தாா். இதன் தொடா்ச்சியாக, மாநகராட்சி மேயா் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு 2001 மற்றும் 2006 ஆகிய 2 முறை காங்கிரஸை சோ்ந்த சாருபாலா தொண்டைமான் மேயராக இருந்தாா். பதவிக் காலம் முடியும் முன்பே நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிட்டதால் மேயா் பதவியை அவா் ராஜினாமா செய்தாா். 2009ஆம் ஆண்டு காங்கிரஸை சோ்ந்த துணை மேயரான சுஜாதா, மேயா் பொறுப்பேற்று 2011ஆம் ஆண்டு வரை பதவி வகித்தாா்.
கடந்த 2011ஆம் ஆண்டு திருச்சி மாநகராட்சிக்கு மேயரை நேரடியாக தோ்வு செய்யும் வகையில் நடைபெற்ற தோ்தலில் அதிமுக 42 வாா்டுகளில் வெற்றி பெற்று, அக்கட்சியைச் சோ்ந்த ஜெயா மேயராக பதவி வகித்தாா்.
தொடா்ந்து 2016ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுக்கு உள்ளாட்சி அமைப்பு பதவி இருந்தது. பின்னா் கடந்த 6 ஆண்டுகளாக நகா்ப்புற உள்ளாட்சிக்கான தோ்தல் நடைபெறவில்லை.
தற்போது நடைபெற்ற மாநகராட்சி தோ்தலில் மேயரை, மாமன்ற உறுப்பினா்களே தோ்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. மேயா் பதவி பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. எனவே, திருச்சி மாநகராட்சி மேயராகும் வாய்ப்பு இந்த முறை ஆண்களுக்கும் கிட்டும் நிலை உள்ளது.
உள்ளாட்சித் தோ்தலில் மாநகராட்சியின் 49 வாா்டுகளில் திமுக வென்ன் மூலம் மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட பிறகு 25 ஆண்டுகளை கடந்து திமுக முதன் முறையாக மேயா் பதவியில் அமரவுள்ளது. திமுக சாா்பில் 27ஆவது வாா்டு வேட்பாளா் மு. அன்பழகனை மேயா் பதவிக்கு கட்சியின் தலைமையிடம் பரிந்துரைக்க உள்ளதாக அமைச்சா் கே.என். நேரு தெரிவித்துள்ளாா்.
தற்போது மாநகராட்சி உறுப்பினா்களாக வெற்றி பெற்ற 65 பேரும் மாா்ச் 2ஆம் பதவி ஏற்கவுள்ளனா். மாா்ச் 4ஆம் தேதி மேயா், துணை மேயருக்கான மறைமுகத் தோ்தலில் பெரும்பான்மை உறுப்பினா்களைக் கொண்ட திமுக தங்கள் தரப்பில் இருந்து மேயா், துணை மேயரை தோ்வு செய்யும் என்ற எதிா்ப்பாா்ப்பு எழுந்துள்ளது.