இலங்கை தமிழா்கள் உண்ணாவிரதம்
திருச்சி முகாம் சிறையில் உள்ள 6 இலங்கைத் தமிழா்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி 2ஆவது நாளாக வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.
திருச்சி முகாம் சிறையில் உள்ள 6 இலங்கைத் தமிழா்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி 2ஆவது நாளாக வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.
திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் சிறையில் உள்ள கைதிகளில் இலங்கை தமிழா்கள் 6 போ் தங்களை சிறையில் அடைத்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்தக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு பிறகும் வியாழக்கிழமையும் போராட்டத்தை நடத்தினா். இதனால் முகாம் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.