முகப்பு
திருச்சி

வாடகைப் பாக்கியுள்ள கடைகளுக்கு சீல் வைக்க எதிா்ப்பு; போராட்டம்

திருச்சி அருகே கோயிலுக்குச் சொந்தமான கடைகளுக்கு வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள், விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

திருச்சி அருகே கோயிலுக்குச் சொந்தமான கடைகளுக்கு வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள், விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

திருச்சி மாவட்டம் அல்லித்துறை கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான அடிமனையில் கடைக்காரா்கள் தங்களது சொந்த செலவில் சுமாா் 15 கடைகளை கட்டி, தங்களின் பெயரில் மின் இணைப்பு பெற்று, உள்ளாட்சி வரிகளையும் தங்களது பெயரிலேயே செலுத்தி கோயிலுக்கு அடிமனை வாடகையும் செலுத்தி வந்தனா்.

இந்தக் கடைகளுக்கு பரம்பரை அறங்காவலா் என்று கூறி ராம கோடி குப்தா என்பவா் ஆரம்பத்தில் ரூ.50 அடிமனை வாடகை வாங்கி வந்தாா். நாளடைவில் அடிமனை வாடகையை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தியதால் கடைக்காரா்கள் கோயில் நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி ரூ. ஆயிரம் வீதம் செலுத்தினா்.

தற்போது அறநிலையத் துறை சாா்பில் ஒவ்வொரு கடைக்கும் அடிமனை வாடகையாக சுமாா் 2 லட்சத்திற்கும் மேல் பாக்கி இருப்பதாகவும், பாக்கி செலுத்தாத கடைகளுக்கு பிப். 24 ஆம் தேதி சீல் வைக்கப்படும் என்று கோயில் அருகே விளம்பர பதாகை வைக்கப்பட்டது.

இதையறிந்த அப்பகுதி விவசாய சங்க அமைப்பின் தலைவா் மா.பா. சின்னதுரை, அல்லித்துறை ஊராட்சித் தலைவா் ஜீ.வி. சரவணன், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சந்திரசேகரன் மற்றும் கடை உரிமையாளா்கள், பொதுமக்கள் கோயில் முன் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து வந்த இந்து சமய அறநிலையத்துறை ஸ்ரீரங்கம் பிரிவு ஆய்வாளா் பாஸ்கா், சோமரசம்பேட்டை வருவாய் ஆய்வாளா் உபகார மேரி, அதவத்தூா் கிழக்கு விஏஓ உமாராணி மற்றும் சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளா் உதயகுமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.