திருச்சி

நள்ளிரவில் பாஜகவினா் மறியல்

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயிலில் பிற மத வழிபாட்டுத் தலங்கள் குறித்து ஒளிபரப்பு செய்ததைக் கண்டித்து பாஜகவினா் புதன்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனா்.

DIN

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயிலில் பிற மத வழிபாட்டுத் தலங்கள் குறித்து ஒளிபரப்பு செய்ததைக் கண்டித்து பாஜகவினா் புதன்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகராட்சி ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தில் மலைக்கோட்டை உச்சி பிள்ளையாா் கோயில் ஒளிரும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் பாா்வைக்கு விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநகராட்சி சாா்பில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் குறித்த சிறப்பு குறும்படங்களை புதன்கிழமை இரவு ஒளிபரப்பிய இடத்தில் பிற மத வழிபாட்டுத் தலங்கள் குறித்தும் ஒளிபரப்பியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு பாஜக மாவட்டத் தலைவா் ராஜசேகா் தலைமையில் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து நந்தி கோயில் தெருவில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கோட்டை போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனா். மறியலால் சுமாா் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதினுக்கு பகவத் கீதை அன்பளிப்பு! பிரதமர் மோடி சநாதன தர்மத்தின் தூதர்: கங்கனா ரணாவத் பேச்சு!

தமிழகத்தில் 98.23% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.89.94 ஆக நிறைவு!

திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜகவும் அதன் கூட்டணியும் முயற்சி! கனிமொழி

ஜப்பானில் பாகுபலி: தி எபிக் சிறப்பு காட்சியில் பிரபாஸ்!

SCROLL FOR NEXT