முகப்பு
திருச்சி

அரசுப் பேருந்தில் சிக்கி நிதி நிறுவன ஊழியா் பலி

மணப்பாறை அருகே அரசுப் பேருந்தில் சிக்கி தனியாா் நிதி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

மணப்பாறை அருகே அரசுப் பேருந்தில் சிக்கி தனியாா் நிதி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த சீகம்பட்டியை சோ்ந்தவா் மலையாண்டி மகன் கண்ணதாசன் (29). இவா் திண்டுக்கல் சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவன வாகன கடன் வசூலிப்பாளா். வேலை நிமித்தமாக வெள்ளிக்கிழமை இரவு மணப்பாறையிலிருந்து காவல்காரன்பட்டிக்கு பைக்கில் கண்ணதாசன் சென்றபோது பாலகருதம்பட்டி அருகே துவரங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்தின் பின்புறச் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற புத்தநத்தம் போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.