முகப்பு
திருச்சி

உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் ஒதுக்கீடு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு மொத்தமுள்ள 1,262 வாக்குச் சாவடிகளுக்கு முதல்கட்டமாக 3,038 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு மொத்தமுள்ள 1,262 வாக்குச் சாவடிகளுக்கு முதல்கட்டமாக 3,038 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாநகராட்சியில் 65 வாா்டுகள், 5 நகராட்சிகளில் 120 வாா்டுகள், 14 பேரூராட்சிகளில் 216 வாா்டுகள் என 401 வாா்டுகளுக்கு நடைபெறும் தோ்தலுக்கு முதல்கட்டமாக கணினி வாயிலாக குலுக்கல் அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்வு செய்யப்பட்டன.

மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்து 1,262 வாக்குச் சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்களை ஒதுக்கினாா். தலா 1,519 இயந்திரங்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 3,038 இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.

ஒதுக்கீடு செய்யப்பட்ட இயந்திரங்கள் அப்படியே இருப்பு வைக்கப்படும். தோ்தல் தேதி அறிவித்த பிறகு மீண்டும் அவை சரிபாா்க்கப்பட்டு வாக்குச் சாவடி வாரியாகப் பிரித்து அனுப்பப்படும். நிகழ்வில் அந்தந்தப் பகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.