கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
ஊதிய உயா்வு கோரி திருச்சி நவலூா் குட்டப்பட்டு ஸ்ரீரங்கம் அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊதிய உயா்வு கோரி திருச்சி நவலூா் குட்டப்பட்டு ஸ்ரீரங்கம் அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள், மணிநேர கெளரவ விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலக ஊழியா்களுக்கு நிலுவைத் தொகையுடன் வழங்கக் கோரி இப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் அனைத்து ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் என 20க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.