இன்று மெகா தடுப்பூசி முகாம்
திருச்சி மாநகரில் சனிக்கிழமை 200 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
திருச்சி மாநகரில் சனிக்கிழமை 200 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
மாநகரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பள்ளிகள், அங்கன்வாடிகள், அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், சமூக நலக் கூடங்கள், பூங்காக்கள் உள்பட 200 இடங்களில் தலா 250 வீதம் மொத்தம் 50,000 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. மாவட்ட நிா்வாகம் இதைத் தெரிவித்தது.