முகப்பு
தமிழ்நாடு

கட்சி விளம்பரங்களுடன் விற்பனையை சூடேற்றும் தவெக! விசில் சப்தம் கேட்கிறதா?

இ-வணிக நிறுவனங்களில், கட்சி விளம்பரங்களுடன் வரும் பொருள்களின் விற்பனையை சூடேற்றும் தவெக

Updated On : 26 மார்ச் 2026, 3:11 pm IST
தவெக சின்னங்கள் - ENS
பகிர்:

பொதுவாகவே தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, தேர்தல் பரபரப்பு தமிழகத்தை ஆக்ரமித்திருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

தேர்தல் காலத்தில் கட்சித் தலைவர்கள், சின்னம் அச்சிடப்பட்ட பொருள்களின் விற்பனை உச்சத்தை அடைவது, வரலாற்றில் புதிதல்ல. ஆனால், 2026 தேர்தலில் ஒரு புதிய மாற்றம் என்னவென்றால், எப்போதும் மாநிலத்தின் ஆளுங்கட்சி மற்றும் முன்னணின் கட்சிகளின் பொருள்கள் அதிகம் விற்பனையாகும் நிலையில், தற்போது அதிகம் விற்கப்படும் பொருள்களின் வகையிலும், அதற்கான தேவையிலும் ஒரு மாற்றம் வந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

இ-வணிக நிறுவனங்களில் டி-ஷ்ர்ட் மட்டுமல்ல, வெள்ளை சட்டைகளிலும் விஜய் படம் பொறித்த சட்டைகளும், டிவிகே பேட்ஜ், தொப்புகள் என விற்பனை சூடுபிடிக்கிறது.

Advertisement

Advertisement

இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணம், நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய்யின் தவெக கட்சியும், அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பதும், இளைஞர்களே அதிகமாக இ-வணிக நிறுவனங்களிலிருந்து பொருள்களை வாங்குவது என்பதும்.

கட்சித் தலைவர்கள், சின்னங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் பனியன், முதல் சுடிதார்கள், தொப்பி, விசிறி, கண்ணாடி, கைப்பை என புதிய வகை பொருட்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

பிரபலமான மின்வணிகத் தளங்களில் ஏதேனும் பொருள்களை வாங்க உலாவும்போது, கட்சி சின்னங்களை அதிகம் கொண்ட பொருள்களில் ​​திமுக மற்றும் அதிமுக போன்ற முன்னணி கட்சிகளுடன் ஒப்பிடுகையில், தவெக கட்சிச் சின்னம் மற்றும் தலைவரின் படம் இடம்பெற்ற பொருள்களின் பட்டியலும் வகையிலும் ஒரு பெரும் வேறுபாடு காணப்படுகிறது

அதாவது, இ-வணிக நிறுவனங்களிலிருந்து இளைஞர்கள் அதிகம் வாங்கும் பொருள்களில் தவெக சின்னங்கள் அதிகம் இடம்பெற்றிருப்பதும், அதன் விற்பனை மும்முரமாக நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அறிந்துகொண்ட பொருள்கள் உற்பத்தி நிறுவனங்களும், இளம் தலைமுறையினரை அதிகம் வாங்கத் தூண்டும் வகையிலான பொருள்களை பிரத்யேகமாக உருவாக்கி விற்பனைக்குக் கொண்டு வருவதை முனைப்போடு செய்து வருகிறார்கள்.

தற்போதெல்லாம் விஜய் படம் இடம்பெற்ற சாவிக்கொத்துகள், பேனா, கடிகாரம், கைக்காப்புகள், ஆடைகள், தொப்பிகள், பரிசுப் பொருள்கள் அதிகம் விற்பனையாகி வருகிறதாம்.

வழக்கமாக திமுக மற்றும் அதிமுகவினர், டி-ஷர்டு, சால்வை, கொடிகள் போன்ற வழக்கமான பொருள்களை மட்டுமே வாங்குகிறார்கள்.

ஆனால், தவெகவினரோ தாறுமாறாக இருக்கிறார்கள். அதிக விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். பொருளின் தரம், ஸ்டைல் என பலவற்றை அவர்கள் கவனத்தில் கொள்கிறார்கள். அதிலும் டி-ஷர்ட் என்பது முன்பு ஆண்களுக்கு மட்டும் என்று இருந்த நிலை மாறி பெண்களும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும்போது மேலே டி-ஷர்ட் அணிவதை வழக்கமாக வைத்திருப்பதால், டி-ஷர்ட் முதலிடம் பிடிக்கிறது.

-ராஜலட்சுமி சம்பத்

summary

E-commerce companies are heating up sales of products that come with party promotions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.