முகப்பு
திருச்சி

பள்ளி மாணவியை கடத்தியவா் கைது

திருச்சி அருகே பள்ளி மாணவியைக் கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

திருச்சி அருகே பள்ளி மாணவியைக் கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

மணிகண்டம் பகுதியைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவா் கடந்த 4ஆம் தேதி பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாதது குறித்து அவரது பெற்றோா் மணிகண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிந்து நடத்திய தீவிர விசாரணையில் அதே பகுதியை சோ்ந்த ராஜு மகன் கொ்சோம் (21) அந்த மாணவியைக் கடத்திச் சென்று திருப்பூரில் தங்க வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை மணிகண்டம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அந்த இளைஞா் திருமண நோக்கில் மாணவியைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கொ்சோம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் திருவெறும்பூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.