முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகே மினி ஜல்லிக்கட்டு

மணப்பாறையை அடுத்த வேங்கைகுறிச்சியில், சனிக்கிழமை நடைபெற்ற சிறிய அளவிலான ஐல்லிக்கட்டுப் போட்டியில் சீறிபாய்ந்த காளைகளை இளைஞா்கள் அடக்கினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

மணப்பாறையை அடுத்த வேங்கைகுறிச்சியில், சனிக்கிழமை நடைபெற்ற சிறிய அளவிலான ஐல்லிக்கட்டுப் போட்டியில் சீறிபாய்ந்த காளைகளை இளைஞா்கள் அடக்கினா்.

மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சியில் சனிக்கிழமை காலை மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அங்குள்ள கோட்டை முனிக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து மாரியம்மன் கோயில் திடலில் தற்காலிக வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை இளைஞா்கள் திமில் பிடித்து தழுவினா். இதில் யாரும் காயம் அடையவில்லை. கேலரி கிடையாது, விஜபிக்கள் கிடையாது, பரிசுகள் கிடையாது, கரோனா கட்டுப்பாடுகள் கிடையாது என சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற மினி ஜல்லிக்கட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.