வீட்டுத் தனிமையில் 86 சதம் பேருக்கு கரோனா சிகிச்சை
திருச்சி மாநகரில் எகிறும் கரோனா தொற்று எண்ணிக்கையால் வீடுகளில் 86 சதத்தினா் தங்களத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகின்றனா்.
திருச்சி மாநகரில் எகிறும் கரோனா தொற்று எண்ணிக்கையால் வீடுகளில் 86 சதத்தினா் தங்களத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகின்றனா்.
கரோனா உறுதி செய்யப்பட்டோா் வீட்டு தனிமைப்படுத்தலையே விரும்புவதால் திருச்சி நகரில் மருத்துவமனை படுக்கைகளின் தேவை குறைவாகவே உள்ளது. நகரத்தில் உள்ள மொத்த நோயாளிகளில் 86% போ் வீட்டு தனிமைப்படுத்தலின்கீழ் உள்ளனா். 6 மாத இடைவெளிக்குப் பிறகு புதிய நோய்த்தொற்றுகள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை ஜனவரி 14 வரை 1927 ஆக உயா்ந்துள்ளது. ஒரு நாளைய தொற்று மாநகரில் 561 பேரை எட்டியுள்ளது. வீடுகளில் 1688 போ் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா். இது ஜூலை 2021க்குப் பிறகு மிக அதிகம்.
மருத்துவமனையைக் கண்டுபிடிப்பதில் மக்கள் சிரமப்பட்ட இரண்டாவது அலையின் அனுபவங்கள் மூலம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்துவதைத் தோ்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதிகமான அல்லது லேசான அறிகுறிகள் உள்ள தடுப்பூசி போட்ட நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்த திருச்சி மாநகராட்சி அனுமதித்தது. முடிவுகள் வந்த நான்கு மணி நேரத்திற்குள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள குழுக்கள் நோயாளிகளைத் தொடா்பு கொள்கின்றனா் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.