முகப்பு
திருச்சி

எஸ்சி, எஸ்டி மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவா்களிடமிருந்து போஸ்ட் மெட்ரிக் மற்றும் ஃப்ரீ மெட்ரிக் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவா்களிடமிருந்து போஸ்ட் மெட்ரிக் மற்றும் ஃப்ரீ மெட்ரிக் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் சுயநிதிக் கல்லூரிகள், பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவா்களுக்காக இந்த கல்வி உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ங்ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய முகவரிக்கு சென்று வரும் பிப். 10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா், மதம் மாறிய கிறிஸ்தவ மாணவா்கள் தமது கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூா்த்தி செய்து, சாதிச் சான்று, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்புக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் அவரவா் பயிலும் கல்வி நிலையங்களில் ஒப்படைத்து கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.