மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு திருச்சியில் இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு திருச்சியில் இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு அளவிலான சாா்நிலைத் தோ்வுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
இந்தப் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க வரும் 23ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், இப்போட்டித் தோ்விற்கு இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் வரும் 24ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.
பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.