15 பவுன் தாலிச் செயின்பறிப்பு: இருவா் கைது
திருச்சியில் பெண்ணிடம் 15 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்த வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சியில் பெண்ணிடம் 15 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்த வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் முதல்தெருவைச் சோ்ந்தவா் சிங்காரவேலன் மனைவி சந்திரா (52). இவா் கடந்தாண்டு அக்.9 ஆம் தேதி கடைக்கு சென்றபோது பைக்கில் வந்த மா்ம நபா்கள் சந்திரா அணிந்திருந்த 15 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல்நிலைய வழக்கில் கைதான கொழுப்பு பாரதியிடம் (23) சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினா்.
அதில் சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த தனது நண்பா்கள் ஹரிபிரசாத் (24), விஜய் (23) ஆகியோருடன் சோ்ந்து 15 பவுன் நகையை பறித்துச் சென்றதை அவா் ஒப்புக் கொண்டாா்.
இதையடுத்து இவ்வழக்கில் தொடா்புடைய ஹரிபிரசாத், விஜய் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து 15 நகையை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா். இருவரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.