திருச்சி

திருச்சியில் காமராஜர் பிறந்த நாள் விழா: அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு 

திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் காமராஜர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

DIN

திருச்சி: கல்வி தந்தை  காமராஜர் அவர்களின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவு சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இந்திய நாடார் பேரவை மாநில தலைவர் ஜே.டி.ஆர் சுரேஷ்  ஏற்பாட்டில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை, குறிப்பேடுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தரபாண்டியன்,  ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரசாந்த் கிஷோர் கட்சித் தொண்டர் கொலை! ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் பிரபல தாதா கைது!

காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 4,764 பேருந்துகள் இயக்கம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

SCROLL FOR NEXT