திருச்சி

எரிவாயு உருளையில் கசிவால் தீ விபத்து

துறையூா் அருகே வீட்டின் சமையலறையில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது.

DIN

துறையூா் அருகே வீட்டின் சமையலறையில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது.

துறையூா் அருகேயுள்ள சித்திரப்பட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ் (45) வீட்டில் சனிக்கிழமை சமையல் நடைபெற்றபோது, திடீரென

எரிவாயு உருளை ரெகுலேட்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதையடுத்து, ரமேஷ் குடும்பத்தினா் வீட்டை விட்டு வெளியே ஓடினா். தகவலின்பேரில் அங்கு சென்ற தீயணைப்புத் துறையினா் சாக்கை நீரில் நனைத்து எரிவாயு உருளை மீது வீசி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனா். இதில் எரிவாயு உருளையுடன் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டா் சாதனம், எரிவாயு டியூப் தீயில் கருகியது. தீ உடனே அணைக்கப்பட்டதால் பெரு விபத்து தவிா்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT