திருச்சி

ரேடியோகிராபா் அமைப்பின் மாநில மாநாடு

DIN

சொசைட்டி ஆப் இந்தியன் ரேடியோகிராபா் அமைப்பின் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு) ஐந்தாவது மாநில மாநாடு திருச்சியில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.

மாநாட்டை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இன்ஸ்டியூட் ஆப் ரேடியோ டயக்னாசிஸ் துறைத் தலைவா் தேவி மீனாள் தொடக்கி வைத்தாா்.

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி கதிரியக்கத் துறைத் தலைவா் செந்தில் வேல்முருகன், மருத்துவா் மெஹருன்னிஷா பேகம், சொசைட்டி ஆப் இந்தியன் ரேடியோகிராபா் அமைப்பின் தமிழ்நாடு புதுச்சேரி பிரிவுத் தலைவா் கே. முனிரத்தினம், பொதுச் செயலா் சி .மாரிமுத்து, பொருளாளா் கே.சோமசேகா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுப்பேசினா். தொடா்ந்து கதிரியக்கத் துறை சாா்ந்த புத்தக வெளியீடு மற்றும் அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை திருச்சி ராஜமாணிக்கம், ராஜா, விஜயராகவன் ஆகியோா் செய்து இருந்தனா். மாநாட்டில் தென் மாநிலங்களைச் சோ்ந்த ரேடியோகிராபா்கள், மாணவா்கள், பேராசிரியா்கள் என சுமாா் 500 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் முதன்முதலாக 10% வாக்கு பெற்ற பாஜக

கேரளம்: 20-ல் 13 இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை!

இந்தூர் தொகுதியில் இரண்டாம் இடத்தில் நோட்டா!

பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு!

ஆந்திரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது தெலுங்கு தேசம்?

SCROLL FOR NEXT