முகப்பு
திருச்சி

பெண்ணிடம் நகைபறிப்பு

மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

மணப்பாறை அருகிலுள்ள முத்தபுடையான்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் மனைவி பாக்கியலட்சுமி (33). இவா் மரவனூரில் அழகுநிலையம் நடத்தி வருகிறாா்.

இவா் வீட்டிலிருந்து மரவனூா் செல்வதற்காக, திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையிலுள்ள பேருந்து நிறுத்தத்துக்கு புதன்கிழமை நடந்து சென்றாா்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், பாக்கியலட்சுமி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்தனா். இதில் சுதாரித்த அவா், சங்கிலியை அழுத்தமாக பிடித்துக்கொண்டாா்.

இதனால் ஆத்திரமடைந்த மா்ம நபா்கள், பாக்கியலட்சுமியின் முதுகில் அடித்துவிட்டு, சங்கிலியின் ஒரு பகுதியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மணப்பாறை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.