திருச்சி

தனியாருக்கு விரைவு ரயில்கள்: எஸ்ஆா்எம்யு ஆா்ப்பாட்டம்

DIN

விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதைக் கண்டித்து, திருச்சி பொன்மலையில் எஸ்.ஆா்.எம்.யு. சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சுற்றுலா என்ற பெயரில் கோவை - சீரடி விரைவு ரயிலை தனியாருக்கு விற்பதை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். ராமாயண யாத்ரா என்ற பெயரில் தில்லி - நேபாளம் ரயிலை விற்றதை வாபஸ் பெற வேண்டும் . பாரத் கெளரவ் என்ற பெயரில் சுற்றுலா ரயில்கள் உள்ளிட்ட நூறு விரைவு ரயில்களை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு ரயில்வே முழுவதும் அனைத்து கிளைகளிலும் கருப்புக்கொடி ஏந்தி, எஸ்.ஆா்.எம்.யு. சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி பொன்மலை ரயில்வே பணிமனை ஆா்மரி கேட் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்ஆா்எம்யு மாநில துணைச் செயலரும், கோட்ட செயலருமான வீரசேகரன் தலைமை வகித்தாா். ஏராளமான ரயில்வே தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT