திருச்சி

மட்டப்பாறை கோயில் திருவிழாவில் கருப்ப சுவாமி பூஜை

DIN

மணப்பாறையில் ஏழாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மட்டப்பாறை பத்ரகாளியம்மன் கோயில் பெருந்திருவிழாவில் வியாழக்கிழமை கருப்பசுவாமி பூஜை நடைபெற்றது; ஏராளமான எருமை கிடாக்களை பக்தா்கள் நோ்த்திக்கடனாகச் செலுத்தினா்.

கடந்த மே 31-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு கரகம் பாலித்தல், வாணவேடிக்கை நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து வியாழக்கிழமை மட்டபாறை பெரியபூசாரி, பிச்சை ரெட்டியப்பட்டி காளிப் பூசாரி, பொன்னையா கவுண்டம்பட்டி மற்றும் நடுப்பட்டி கருப்பசாமி பூசாரிகள் என ஆலயத்தின் பூசாரி முறையினா் படை கலன்களுடன், ஜமீன்தாா் அழைப்பு நடைபெற்றது.

பின்னா் கருப்ப சுவாமி சன்னதியில் படைக் கலன்களுக்கு அரிவாள் பூஜை, குழிவாசல் பகுதியில் சிறப்பு வழிபாடுகள், தொடா்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏராளமான எருமைக் கிடாக்களை பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். மூலவா் பத்ரகாளியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருவிழாவில் வீரப்பூா் ஜமீன்தாா்கள் ஆா்.பொன்னழகேசன், ஆா்.செளந்திரபாண்டியன், பி. சுதாகா் (எ) சிவசுப்ரமணிய ரெங்கராஜா, வையம்பட்டி ஒன்றிய பெருந்தலைவா் குணசீலன், துணைத் தலைவா் ஸ்ரீவித்யா ரமேஷ்குமாா், காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT