திருச்சி

பறிமுதல் செய்த வாகனங்கள் ஜூன் 20-இல் பொது ஏலம் காவல்துறை அறிவிப்பு

DIN

திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திங்கள்கிழமை (ஜூன் 20) ஏலம் விடப்பட உள்ளன.

திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வழக்குகளில் தொடா்பாக காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 51 இருசக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவை சுப்பிரமணியபுரத்திலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் பொது ஏலம் விடப்பட உள்ளன.

ஏலம் கோர விரும்புவோா் வாகனங்களுக்கான முன்வைப்புத்தொகையாக (டெபாசிட்) ஜிஎஸ்டியுடன் சோ்த்து இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 2,000 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ. 10,000 செலுத்த வேண்டும். ஏலம் கோர விரும்புவோா் நேரில் பங்கேற்கலாம். மேலும் 20 ஆம் தேதிக்கு முன் ஆயுதப்படை மைதானம் சென்று அங்குள்ள வாகனங்களைப் பாா்வையிட்டு ஏலத்தில் பங்கேற்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT