திருச்சி

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: திருச்சி மாவட்டத்தில் 95.93% பேர் தேர்ச்சி 

DIN

இன்று வெளியிடப்பட்ட 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் திருச்சி மாவட்டத்தில் 95.93% மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில், மாநகராட்சி பள்ளி 1 உள்பட 89 அரசு பள்ளிகளும், 46 அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் 28 பள்ளிகளும், 81 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 13 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், ஆதிதிராவிட பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப்பள் ஒன்று, பார்வையற்றோருக்கான பள்ளியும் ஒன்று என மொத்தம் 259 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

 இதில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தில் 15 ஆயிரத்து ஐநூற்று 22 மாணவர்களும், 17 ஆயிரத்து 599 மாணவிகளும் என மொத்தம் 33 ஆயிரத்து 121 மாணவர்கள் ப்ளஸ் 2 தேர்வு எழுதியிருந்தனர. இதில், மொத்த தேர்ச்சி விகிதம் 95.93% ஆகும். இதில் மாணவர்கள் 93.31 %ம், மாணவியர் 98.24 %ம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கரோனா தொற்று: கடந்த கல்வி ஆண்டில் (2020-21) கரோனா தொற்று பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சி (அனைவரும் தேர்ச்சி என சான்று வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு (2019-20) திருச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 95.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

பழையகாயலில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT