திருச்சி

திருச்சியில் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் முற்றுகை: போலீஸ் குவிப்பு!              

DIN

திருச்சி: உரம் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 150-க்கு மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது, மத்திய அரசு உயர்த்தியுள்ள 58% உரம் விலையை கண்டித்தும், நெல்லுக்கு உரிய விலையை வழங்க வலியுறுத்தியும், மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகத்தை கண்டித்தும் முழக்கமிட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுப்படவே காவல்துறையினருக்கும், போராட்டகாரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆட்சியரகம் முன் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT