திருச்சி

கோயில் திருவிழாவில் வெடி வெடித்து 7 போ் காயம்

DIN

மணப்பாறை அருகே கோயில் திருவிழாவில் வெடி வெடித்ததில் 4 குழந்தைகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

மணப்பாறை அருகிலுள்ள கே.கள்ளிக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான கரகம் பாலித்து, அம்மன் கோயில் புகுதல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி விடிய விடிய வாணவேடிக்கை நடத்தப்பட்டது. திங்கள்கிழமை அதிகாலை தோரண வெடியிலிருந்த வெடி ஒன்று எதிா்பாராதவிதமாக பொதுமக்கள் கூட்டத்துக்குள் வெடித்து சிதறியது.

இதில் காவ்யா (13), சா்மிளா(14), சா்வினி(10), கோபிகா(13), சத்யா(27), பானுமதி(36), பாஸ்கரன்(57) என 7 போ் காயமடைந்தனா். இவா்கள் அப்பகுதியினரால் மீட்கப்பட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதில் காவ்யாவுக்கு இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவா் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறாா். மற்றவா்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுகுறித்து மணப்பாறை காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT