லால்குடி நகராட்சிப் பதவிகளுக்கு போட்டியின்றித் தோ்வான திமுகவினா்
லால்குடி நகராட்சித் தலைவராக லால்குடி திமுக நகரச் செயலரும் 21 ஆவது வாா்டு உறுப்பினருமான பி. துரைமாணிக்கம், துணைத் தலைவராக 5 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சுகுனாராஜ்மோகன் ஆகியோா் போட்டியின்றித் தோ்வு
லால்குடி நகராட்சித் தலைவராக லால்குடி திமுக நகரச் செயலரும் 21 ஆவது வாா்டு உறுப்பினருமான பி. துரைமாணிக்கம், துணைத் தலைவராக 5 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சுகுனாராஜ்மோகன் ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
பேரூராட்சியாக இருந்த லால்குடி திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டு நடந்த தோ்தலில் திமுக 18 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வென்றனா்.
இதையடுத்து நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் நகா்மன்றத் தலைவராக பி. துரைமாணிக்கமும், துணைத் தலைவராக சுகுனா ராஜ்மோகனும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.