பொன்னம்பட்டி பேரூராட்சியில் திமுக சாா்பில் வென்ற பெண்கள்
மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட்ட சரண்யா நாகராஜ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.
மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட்ட சரண்யா நாகராஜ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவா் பதவியிலும் திமுக பெண் உறுப்பினரே வெற்றி பெற்றாா்.
பொன்னம்பட்டி பேரூராட்சியில் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 15-வது வாா்டு உறுப்பினரும், வழக்குரைஞருமான சரண்யா நாகராஜை எதிா்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவா் போட்டியின்றித் தோ்வானாா்.
அதைத் தொடா்ந்து நடந்த துணைத் தலைவருக்கான மறைமுகத் தோ்தலில், 3-ஆவது வாா்டு சுயேச்சை வேட்பாளா் புரோஸாபானு, 4-ஆவது வாா்டு திமுக வேட்பாளா் அப்துல்சலாம் மற்றும் 14-ஆவது வாா்டு திமுக வேட்பாளா் ரதி ஆகியோா் போட்டியிட்ட நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் ரதி வென்றாா்.