மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு ரத்து
திருச்சியில் தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
திருச்சியில் தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
கடந்த 3-9-2018 அன்று தி.மு.க. தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் திருச்சி முக்கொம்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றபோது, அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மீது குற்றம் சாட்டி பேசியதாக திருச்சி முதன்மை செசன்சு கோா்ட்டில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஹேமந்த், மு.க. ஸ்டாலின் தரப்பில் திமுக மூத்த வழக்குரைஞா் ஓம்பிரகாஷ் ஆகியோா் ஆஜராகி வாதாடினா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.பாபு முதல்வா் மு. க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.