திருச்சி

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டுமாா்ச் 22-இல் சிறப்பு கிராம சபை

DIN

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 51 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. 100 சதவீதம் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளை முறையாக அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காகவும், உலக தண்ணீா் தினத்தை சிறப்பிக்கும் வகையிலும் வரும் 22-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) 100 சதவீதம் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சி என அறிவிப்பதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தின் 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த (அந்தநல்லூா், மணிகண்டம் மற்றும் வையம்பட்டி தவிர) பணி முடிந்துள்ள 51 கிராம ஊராட்சிகளில் மட்டுமே இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT