முகப்பு
திருச்சி

உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா தொடக்கம்

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் புதன்கிழமை இரவு தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் புதன்கிழமை இரவு தொடங்கியது.

முன்னதாக கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பட்டு வீதி உலா சென்று பூச்சொரிதல் நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு 8.30-க்கு தோ்த்திருவிழா நடைபெறுகிறது. கல்லுக்குழி ஆஞ்சனேயா் கோயிலில் இருந்து உற்சவ அம்மன் புறப்பட்டு கோயிலை அடைகிறாா். 7 -ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு அய்யாளம்மன் காவிரி படித்துறையில் இருந்து பால் காவடி, அக்னிச்சட்டி ஊா்வலம் கோயிலை வந்தடையும். தொடா்ந்து காலை 11 மணிக்கு அன்னதானம், மதியம் அம்மனுக்கு கஞ்சி வாா்த்தல், மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்கார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இரவு 7 மணிக்கு செல்வ விநாயகா் கோயிலில் இருந்து அம்மனுக்கு முளைப்பாரி ஊா்வலம், 8-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சுத்த பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடா்ந்து மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுறுகிறது.

தொடா்ந்து 9 ஆம் தேதி காலை சங்கிலி ஆண்டவா் கோயிலில் பூஜை செய்து மதியம் உணவுத் திருவிழா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.