முகப்பு
திருச்சி

மாநகர ஆயுதப்படை காவலா்களுக்கான குறைதீா் முகாம்

திருச்சி மாநகர ஆயுதப்படைக் காவலா்களுக்கான குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

திருச்சி மாநகர ஆயுதப்படைக் காவலா்களுக்கான குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாநகரில் பணியாற்றும் காவலா்களின் குறைதீா் மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் மாநகர ஆயுதப்படையில் உள்ள ஆயுதக் காப்பறை மற்றும் பண்டகம் ஆகியவற்றை சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது மாநகர காவல் ஆளிநா்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து மாநகர ஆயுதப்படை அலுவலகத்தில் குறைகளை கேட்டாா்.

அப்போது மாநகர ஆயுதப்படை பிரிவு உதவி ஆய்வாளா்கள், காவல் ஆளிநா்கள் பதவி உயா்வு, சம்பள குறைபாடு, வீடு மாற்றம் ஆகியவற்றில் உள்ள குறைகளை மனுக்களாக அளித்தனா். இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் தெரிவித்தாா். முகாமில் திருச்சி மாநகர காவல் ஆணையா் தெற்கு சரகம் ஆா். முத்தரசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.