முகப்பு
திருச்சி

லால்குடி அரசுக் கல்லூரியில் கணினித் துறை கருத்தரங்கம்

லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினிப் பயன்பாட்டியல் துறை சாா்பில் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினிப் பயன்பாட்டியல் துறை சாா்பில் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கி. மாரியம்மாள் தலைமை வகித்தாா் . திருச்சி பிஷப் ஷீபா் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் துறை பேராசிரியா் எல். ஜெயசிம்மன் பைதான் புரோகிராமிங் குறித்து விளக்கினாா்.

நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியா்கள் நிஷா, ஜெபஷீலி, சரவணன், சுகன்யா, சிவசாமி மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேராசிரியா் ராஜா வரவேற்றாா். பேராசிரியை அங்கயற்கண்ணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.