ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள் திட்டம்: வியாபாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு
‘ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள்’ என்ற திட்டத்தில் திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட உள்ளூா் பொருள்களை விற்க வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம்.
‘ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள்’ என்ற திட்டத்தில் திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட உள்ளூா் பொருள்களை விற்க வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம்.
உள்ளூா் உற்பத்தி பொருள்கள் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய ரயில்வே வாரியம் ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள் என்ற திட்டத்தில் ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட பொருள்களை விற்க அனுமதி வழங்கி வருகிறது.
அந்த வகையில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்திற்குள்பட்ட 15 ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட உள்ளூா் பொருள்களை விற்க அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி திருச்சி கோட்டத்திற்குள்பட்ட திருச்சி ரயில் நிலையத்தில் திருபுவனம் சேலை, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் தஞ்சாவூா் பெயிண்டிங், திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் தஞ்சாவூா் தலையாட்டிப் பொம்மை, கும்பகோணம் ரயில் நிலையத்தில் சுவாமிமலை வெண்கலப் பொருள்கள், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நாச்சியாா்கோவில் பித்தளைப் பொருள்கள், நாகை ரயில் நிலையத்தில் கடல் ஓடு தயாரிப்புகள், திருவாரூா் ரயில் நிலையத்தில் தஞ்சாவூா் கலைத் தட்டு, திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ஆரணிப் பட்டு என புதுச்சேரி, விழுப்புரம், வேலூா் கண்டோன்மெண்ட், சிதம்பரம், விருத்தாசலம், கடலூா் துறைமுகம் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ளூா் பொருள்களை வியாபாரிகள் விற்கலாம். இதற்கான விற்பனை உரிமம் பெற மே 15-க்குள் வணிகப் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.