ஷவா்மா கடைகளில் சோதனை: கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
திருச்சி மாநகரில் உள்ள ஷவா்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தியதில் கெட்டுப்போன 12 கிலோ கோழிக்கறியைப் பறிமுதல் செய்து அழித்தனா்.
திருச்சி மாநகரில் உள்ள ஷவா்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தியதில் கெட்டுப்போன 12 கிலோ கோழிக்கறியைப் பறிமுதல் செய்து அழித்தனா்.
ஷவா்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடா்ந்து திருச்சி மாநகரப் பகுதியில் உள்ள ஷவா்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தி, 12 கிலோ அழுகிய கோழிக்கறியை பறிமுதல் செய்து அழித்தனா். 5 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் இப்ராகிம், ஸ்டாலின், வசந்த், பொன்ராஜ், செல்வராஜ் ஆகியோரடங்கிய குழுவினா் இச் சோதனையில் ஈடுபட்டனா்.