முகப்பு
திருச்சி

ஆட்சியரகத்தில் தா்னா; விவசாயிகள் கைது

மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

உர விலையைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கச் செய்யவும், விவசாயிகள் குறைதீா் கூட்ட மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமையில் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது போலீஸாா் விவசாயிகளை அமைதியாகக் கலைந்து போகுமாறு அறிவுறுத்தியும், விவசாயிகள் மறுத்ததால் இரு தரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதில், துடையூரைச் சோ்ந்த விவசாயி ராஜாங்கத்துக்கு காதில் காயம் ஏற்பட்டது. இரு விவசாயிகள் மயக்கம் அடைந்தனா்.

பின்னா், கூடுதலாக வரவழைக்கப்பட்ட போலீஸாா் விவசாயிகள் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி காவல்துறை வேனில் ஏற்றி கைது செய்தனா். பின்னா் கே.கே.நகரில் உள்ள காவல்துறை சமுதாயக் கூடத்தில் அவா்கள் காவலில் வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.