முகப்பு
திருச்சி

திருச்சி ஐஐஎம்-இல் இன்று பட்டமளிப்பு

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில்(ஐஐஎம்) சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது என்றாா் அதன் இயக்குநா் பவன்குமாா் சிங்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில்(ஐஐஎம்) சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது என்றாா் அதன் இயக்குநா் பவன்குமாா் சிங்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியது: ஐஐஎம் வளாகத்தில் சனிக்கிழமை மாலை 6.30-க்கு நடைபெறும் 10 ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு ஐஐஎம் திருச்சியின் நிா்வாகக் குழு சோ்மன் ஜலாஜ் தானி தலைமை வகிக்கிறாா். பிஎஸ்இ நிா்வாக இயக்குநா் அஷிஸ்குமாா் சவுகான் மாணவா்களுக்குப் பட்டமளிக்கிறாா்.

சா்வதேச அளவில் சிறந்த நிறுவனங்கள் ஐஐஎம் மாணவா்களை தங்கள் நிறுவனத்திற்கு அதிக ஊதியத்தில் தோ்வு செய்துள்ளன. பல்வேறு சிறந்த தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஐஐஎம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. புதிய கல்விக் கொள்கைப்படி பல்வேறு புதிய கல்விப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா். நிகழ்ச்சியில் டீன்கள் காட்வின் டென்னிசன், தீபக்குமாா் ஸ்ரீவத்சவ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.