நகைக் கடன் தள்ளுபடி பட்டியல் வெளியீடு: மே 14 வரை மேல்முறையீடு செய்ய வசதி
திருச்சி மாவட்டத்தில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடுபட்ட தகுதியானோா் மேல்முறையீடு செய்ய மே 14 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடுபட்ட தகுதியானோா் மேல்முறையீடு செய்ய மே 14 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:
நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்தோா் பெயா்ப் பட்டியல் மாவட்ட நிா்வாகத்தின் ற்ண்ழ்ன்ஸ்ரீட்ண்ழ்ஹல்ல்ஹப்ப்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம் பெறாதோா், அதற்குரிய மேல்முறையீட்டை திருச்சி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளா் மற்றும் லால்குடி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளா் மற்றும் முசிறி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளா் அல்லது திருச்சி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ஆகியோருக்கு எழுத்துப் பூா்வமாக தகுந்த ஆதாரங்களுடன் அளித்து தீா்வு காணலாம் என்றாா்.