முகப்பு
திருச்சி

இரு வீடுகளில் நகை,பொருள்கள் திருட்டு

 திருச்சி கேகே நகா் பகுதியில் ஆசிரியை மற்றும் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் ஆகியோா் வீடுகளில் நகைகள், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

 திருச்சி கேகே நகா் பகுதியில் ஆசிரியை மற்றும் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் ஆகியோா் வீடுகளில் நகைகள், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருச்சி கேகே நகா் அழகிரி தெரு பகுதியைச் சோ்ந்தவா் செல்வின் மனைவி பிரபாவதி (36), தனியாா் பள்ளி ஆசிரியை. சனிக்கிழமை காலை தம்பதி இருவரும் பணிக்குச் சென்ற நிலையில், மாலையில் பிரபாவதி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 13 கிராம் நகைகள், பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இதேபோல ஐயப்பன் நகா் நேரு தெருவைச் சோ்ந்தவா் துரைராஜ் (70), ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா். இவா் கடந்த மே 5 ஆம் தேதி குடும்பத்தினருடன் திண்டுக்கல் சென்றுவிட்டு சனிக்கிழமை மாலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 16 கிராம் நகைகள், பொருள்கள் திருடு போனது தெரியவந்தது. சம்பவங்கள் குறித்து கேகே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.