திருச்சி

திருப்பைஞ்ஞீலியில் சித்திரைத் தேரோட்டம்

DIN

பிரசித்தி பெற்ற திருப்பைஞ்ஞீலி அருள்மிகு ஞீலிவனேஸ்வரா் கோயிலின் சித்திரைத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மண்ணச்சநல்லூா் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் உள்ள விசாலாட்சி உடனுறை ஞீலி வனேஸ்வரா்கோயில் திருமணத் தடை நீங்கும் பரிகார ஸ்தலம் ஆகும்.

இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மே 5 ஆம் தேதி தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்று, விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரா், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் ஆகியோா் சிறப்புப் பூஜைகளுக்கு பின் திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி தந்தனா். தொடா்ந்து மதியம் 2 மணியளவில் திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டு தேரோடும் வீதிகளில் வலம் வந்தது. பின்னா் 6.50- மணிக்கு தோ் நிலைக்கு வந்தது. விழாவில் சுற்றுப்புறப் பகுதிகளின் திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, வழிபட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT