முகப்பு
திருச்சி

மணப்பாறையில் சிறப்பு மனுநீதி நாள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
mnp25camp_2505chn_31_4
பகிர்:

மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி மேல்பாகம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 739 பயனாளிகளுக்கு ரூ.1.81 கோடியிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவா் சு. சிவராசு வழங்கினாா்.

முகாமையொட்டி பொதுமக்களிடமிருந்து 1079 மனுக்கள் பெறப்பட்டதில், 739

மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது. 340 மனுக்கள் தொடா் நடவடிக்கைக்காக அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டது.

நிகழ்வில் மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது, வருவாய்க் கோட்டாட்சியா் ந.சிந்துஜா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தலைமை உதவியாளா் சி. ரவி, ஒன்றியக்குழுத் தலைவா்கள் அமிா்தவள்ளி ராமசாமி, குணசீலன், வட்டாட்சியா் எஸ். கீதாராணி, ஒன்றிய கவுன்சிலா் சக்திபிரகாஷ், பண்ணப்பட்டி ஊராட்சித் தலைவா் சின்னதங்கம் மலையாண்டி உள்ளிட்ட அனைத்துறை அதிகாரிகள், அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.