முகப்பு
திருச்சி

சுத்தமல்லியில் நூல் திறனாய்வு கூட்டம்

சுத்தமல்லி திருவள்ளுவா் கழகத்தில் நூல் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

சுத்தமல்லி திருவள்ளுவா் கழகத்தில் நூல் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோமதி நகா் குறளகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு புலவா் வீ.செந்தில் நாயகம் தலைமை வகித்தாா். கவிஞா் மோகன்தாஸ் முன்னிலை வகித்தாா். கவிஞா் சுப்பையா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினாா். திருவள்ளுவா் கழகத்தின் தலைவா் சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்றாா். சுத்தமல்லி அரசுப்பள்ளி ஆசிரியா் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணியின் ‘ஒரு வரவேற்பறையின் வாக்குமூலம்’ கவிதை நூலினை மாவட்ட மைய நூலக வாசகா் வட்ட துணைத் தலைவா் கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் திறனாய்வு செய்து பேசினாா்.

அதனைத் தொடா்ந்து தாமிரவருணி இலக்கிய மாமன்றத் தலைவா் கவிஞா் பாமணி ‘கண்ணதாசன் நினைவலைகள்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா். திருநெல்வேலி திருவள்ளுவா் பேரவை அமைப்பாளா் கவிஞா் ஜெயபாலன், கவிஞா் சக்தி வேலாயுதம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நூலாசிரியா் செல்வமணி ஏற்புரை நிகழ்த்தினாா். பரமசிவன் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற துணை ஆட்சியா் தியாகராஜன், நம்பி, முருகன், கோமதி நமச்சிவாயம், சண்முகசுந்தரி, கோமதி அருணாசலம் உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா். பங்கேற்றவா்களுக்கு கவிதை நூல் பரிசாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.