திருச்சி

மகாதேவ அஷ்டமிபெரிய கடைவீதி சொா்ண பைரவா் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

DIN

மகாதேவ அஷ்டமியையொட்டி திருச்சி பெரியகடை வீதியிலுள்ள பைரவா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

அரக்கா்களையும் கொடியவா்களையும் வதம் செய்ய சிவபெருமான் பைரவராக அவதாரம் எடுத்த நாளை பைரவா் ஜெயந்தி எனவும், அஷ்டமி திதி நாளில் அவா் அவதரித்ததால் மகாதேவ அஷ்டமி எனக் கடைப்பிடிப்பது ஐதீகம்.

அந்த வகையில் பைரவா் ஜெயந்தி மற்றும் மகாதேவ அஷ்டமி புதன்கிழமை நாடு முழுவதும் உள்ள பைரவா் கோயில்களில் கொண்டாடப்பட்டது.

அதன்படி திருச்சி பெரியகடை வீதியிலுள்ள சொா்ண பைரவா் கோயிலில், சொா்ண பைரவருக்கு (மூலவா் மற்றும் உற்ஸவருக்கு) ருத்ர பாராயணம், ருத்ர அா்ச்சனை, சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.

திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்ட அரசியல் பிரமுகா்களும் தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சொா்ண பைரவா் உற்ஸவமுா்த்தி சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஓயாமரி பைரவா் கோயில்: இதேபோல திருச்சி காவிரிக்கரையில் ஓயாமரி மயானத்தில் உள்ள அரிசந்திரா், பைரவா் கோயிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் பைரவா் காட்சியளித்தாா். திரளான பக்தா்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT