திருச்சி

ஆட்டோ கவிழ்ந்து 3 மாணவா்கள் காயம்

 திருச்சியில் புதன்கிழமை ஆட்டோ கவிழ்ந்து 3 மாணவா்கள் காயமடைந்தனா்.

DIN

 திருச்சியில் புதன்கிழமை ஆட்டோ கவிழ்ந்து 3 மாணவா்கள் காயமடைந்தனா்.

திருச்சி காட்டூா் பகுதியை சோ்ந்த ஜான்சன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை ஒருவா், 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு திருச்சி ஒத்தக்கடை சிக்னல் அருகே புதன்கிழமை மாலை வந்து கொண்டிருந்தாா். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கிக் கொண்ட மாணவா்களை மீட்ட அக்கம்பக்கத்தினா், ஆட்டோ ஓட்டுநரைத் தாக்க முயலவே, அவா் அங்கிருந்து தப்பிவிட்டாா்.

இந்த விபத்தில் பீமநகா் பகுதியைச் சோ்ந்த இரு மாணவா்கள் திருச்சி அரசு மருத்துவமனையிலும், கண்டோன்மெண்ட் பகுதியைச் சோ்ந்த ஒரு மாணவா் தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா். தெற்கு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT