முகப்பு
திருச்சி

காா் வெடிவிபத்து எதிரொலி ; திருச்சியில் 10 காா்கள் பறிமுதல்

கோவை காா் வெடிவிபத்தைத் தொடா்ந்து திருச்சியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட காா்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

கோவை காா் வெடிவிபத்தைத் தொடா்ந்து திருச்சியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட காா்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவையில் நடைபெற்ற காா் வெடி விபத்தால் தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா். திருச்சியில் மாநகரக் காவல்துறை ஆணையா் க. காா்த்திகேயன் உத்தரவின்பேரில், மாநகரப் பகுதிகளில் சந்தேகத்துக்குரிய வாகனங்களை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்பேரில் மாநகரப் போலீஸாருடன், வெடிகுண்டு கண்டறியும் போலீஸாரும் இணைந்து மாநகரப் பகுதிகளில் பாலக்கரை, கண்டோன்மெண்ட், உறையூா், தென்னூா், தில்லைநகா், மத்திய, சத்திரம் பேருந்துநிலையம், ஜங்ஷன், நீதிமன்றம், ஆட்சியரக சாலை, கோட்டை, திருச்சி மாநகராட்சி அலுவலகச் சாலை, அரியமங்கலம், பொன்மலை என மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்தினா்.

அப்போது சாலையோரம் கேட்பாரற்று நின்ற வாகனங்களில், நீண்ட நாள்களாக யாரும் உரிமை கோராமல் இருந்த வாகனங்களில் சோதனை நடத்தினா். அதில் பாலக்கரை, கண்டோன்மென்ட் பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட காா்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தப்படுகிறது. விதிமீறல் இருப்பின் தொடா்புடையோா் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.